'59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்; அதிமுக, திமுக செய்யாத செயல்'; மாணிக்கம் தாகூர் ..!
Manickam Tagore states that the Congress party inclusion in the Tamil Nadu Cabinet after 59 years brings a sense of fulfillment
தமிழக சட்டபேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்ற நிலையில், ஆட்சிமையக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 09 அமைச்சர்களும் பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாவும் ஒதுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 21ஆம் தேதியான இன்று 23 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும், அமைச்சரவை விரிவாக்க நிகழ்வில் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

அதன்படி, 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 02 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். காங்கிரஸ் அமைச்சர்களான விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறையும், ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத்துறையும் என முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1952-க்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சி மீள்தொடக்கம் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் அதிகாரம் பெற்றிருக்கும் நிலையில், அது மனதிற்கு நிறைவு தருவதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், சட்டசபையில் மக்களுக்கான பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்று குரலெழுப்பிய காங்கிரஸ், தற்போது பிரச்னையை சரிசெய்யும் இடத்திற்கு சென்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது மிக முக்கியமான ஒரு உயர்வு என்றும், 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து 02 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளது நிறைவை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் கூட்டணியிலும் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது, ஆனால் அதிகாரம் கிடைக்கவில்லை என்றும், ஆனால் அந்த பழைய மாடலை திரு விஜய் அவர்கள் மாற்றியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலேயும், இந்த அமைச்சரவையில் விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளும் இடம்பெறவேண்டும் என்றும், அவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கவேண்டும். அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பது ஜனநாயகத்தின் முக்கிய பங்கு என்று செய்தியார்களிடம் பேசுகையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
English Summary
Manickam Tagore states that the Congress party inclusion in the Tamil Nadu Cabinet after 59 years brings a sense of fulfillment