காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள அபாயம்; ஆனால் உலகளவில்..? உலக சுகாதார அமைப்பு..! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்கா நாடுகளான காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாகவும், உலக அளவில் தொற்று குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயெசஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது;

காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளதாகவும், அவசரநிலைக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பாக தலைமை இயக்குநர் அறிவிப்பது இதுவே முதல்முறை என்றும், சர்வதேச சுகாதார வழிமுறைகள் சட்டம் 12-இன் கீழ் இந்த நடவடிக்கையை தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன், காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளின் சுகாதார அமைச்சர்களுடனான ஆலோசனைகளுக்கப் பிறகு தேவையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எபோலா தொற்றால் அவசரநிலை சூழல் ஏற்படவில்லை என்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும், இந்த அறிவிப்பை அடுத்து அவசரநிலைக் குழு கூட்டத்தை நேற்று நான் கூட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை அந்த குழு ஏற்றது. ஆனால், தொற்றுக்கான அவசரநிலை இல்லை என்பதையும் அது ஏற்றது எட்ன்றும், உலக சுகாதார அமைப்பின் ஆய்வில், எபோலா தொற்று பிராந்திய மற்றும் தேசிய அளவில் அதிகமாக உள்ளது. ஆனால், உலக அளவில் இது குறைவாகவே உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், காங்கோவின் வடக்கு மாகாணங்களான இத்துரி மற்றும் வடக்கு கிவு ஆகியவற்றில் இதுவரை 51 எபோலா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உகாண்டாவில் இரண்டு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எபோலா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் (அதாவது உயிரோடு உள்ளவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள்) எண்ணிக்கை 600 ஆக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது எபோலா பரவலைத் தடுப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேப்போன்று, எபோலா பாதிப்பு குறைந்தது இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என்று காங்கோவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளதாகவும், இதைக் கருத்தில் கொண்டே மேற்கண்ட அபாய மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளதாக டெட்ரோஸ் அதானம் கெப்ரேயெசஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரும் 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை புதுடெல்லியில் நடைபெற இருந்த இந்திய - ஆப்பிரிக்க உச்சி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் தற்போதுள்ள சுகாதாரச் சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதிகள் பரஸ்பர ஆலோசனைகளுக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றும் இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The World Health Organization warns of the risk of increased Ebola virus infections in Congo and Uganda


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->