மலாவி: துணை அதிபர் மாயம்..!! தொடரும் தீவிர தேடுதல் வேட்டை ..!! - Seithipunal
Seithipunal



மலாவி ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நாடு. இந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் , "மலாவியின் துணை அதிபர் சௌலோஸ் சிலிமா சென்ற ராணுவ விமானம் காணாமல் போனது. 

திங்கட்கிழமை காலை 9.17 மணிக்கு மலாவியின் தலைநகரான லிலோக்வேயில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் துணை அதிபர் சௌலோஸ் சிலிமாவுடன் மேலும் 9 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு 370 கி. மீ. தொலைவில் உள்ள Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இந்த விமானத்தின் தொலைத்தொடர்புகள் அதற்கு சிறிது முன்பாகவே  துண்டிக்கப்பட்டன.

இதையடுத்து மலாவி அதிபர், துணை அதிபர் சென்ற விமானத்தை தேடும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் இஸ்ரேல் மற்றும் நார்வே, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் தேடுதல் பணிக்கு தேவையான உதவிகள் மற்றும் சிறப்பு தொழில்நுட்பங்களை வழங்கியுள்ளதாக அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்ததாக ஜனாதிபதி அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மலாவி துணை அதிபர் அந்நாட்டின் முன்னாள் நீதி அமைச்சரான ரால்ப் கஸம்ப்ரா வின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவே விமானத்தில் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த காணாமல் போன விமானத்தில் யாரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Malawi Vice President Missing


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->