சூடுபிடிக்கும் தேர்தல் களம் - தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்த மநீம.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர். அதற்காக அவ்வப்போது குழுவும் அமைத்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில், தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

நடைபெற இருக்கும் 2024 பாராளுமன்றத் தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொண்டு தெரு வெற்றியை ஈட்டுவதற்காக மக்கள் நீதி மையத்தின் மூத்த நிர்வாகிகளை உள்ளடக்கிய தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது

குழு உறுப்பினர்கள்:- 

திரு. A. G. மௌரியா (IPS ) ஓய்வு துணைத் தலைவர் 
திரு. ஆர். தங்கவேலு துணைத் தலைவர்
திரு. ஆ. அருணாச்சலம் MA BL பொதுச் செயலாளர் 

எனது நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் இந்த குழுவிற்கு 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் பிற குழுக்களை அமைப்பதற்கும் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவிற்கு சிறப்பான ஒத்துழைப்பை நன்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

makkal neethi maiyam leader kamalhaasan annaounce Election Coordination Committee


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->