முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மகாராஷ்டிரா ஆளுநர்!
Maharashtra Governor met Tamil Nadu Chief Minister MK Stalin
கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் முழுமையான பரிசோதனைகள் செய்து, ஓய்வு அவசியம் என அறிவுறுத்தினர். மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் மூன்று நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பினார்.
இந்நிலையில், மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு அரசியலுடன் தொடர்பில்லாத, மரியாதை நிமித்தமான ஒன்றாக இருந்ததாக முதல்வர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், ஆளுநர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து, முதல்வரின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து, விரைவில் முழு நலத்துடன் பணிகளை தொடர வாழ்த்துகளை தெரிவித்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது..
English Summary
Maharashtra Governor met Tamil Nadu Chief Minister MK Stalin