"பெரியார் படம் மாயம்" அதிமுகவின் செயலால் வெடித்த சர்ச்சை! மதுரையில் களைகட்டும் NDA மாநாடு!
Madurai NDA Rally Removal of Periyar Portrait Sparks Ideological Debate
மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் நாளை மாலை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பொதுக்கூட்டம், தொடங்குவதற்கு முன்பே அரசியல் ரீதியாக அனலைக் கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்ட நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
நடந்தது என்ன?
சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கூட்ட அரங்கின் முகப்பில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. வழக்கமாகப் பெரியாரைத் தீவிரமாக விமர்சித்து வரும் பாஜக-வின் தலைமையிலான ஒரு கூட்டத்தில் அவரது படம் இடம்பெற்றது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
அதிமுகவின் அதிரடி மாற்றம்:
இருப்பினும், திடீர் திருப்பமாக முகப்பில் இருந்த பெரியாரின் புகைப்படத்தை அதிமுகவினர் தற்போது அகற்றியுள்ளனர். > சர்ச்சை: பெரியாரைத் தங்களது கொள்கை வழிகாட்டியாகக் கூறிக்கொள்ளும் அதிமுகவே, கூட்டணிக் காரணங்களுக்காகவோ அல்லது பிற அழுத்தங்களுக்காகவோ இந்தப் படத்தை அகற்றியிருப்பது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
English Summary
Madurai NDA Rally Removal of Periyar Portrait Sparks Ideological Debate