அண்ணாமலைக்கு உரிய பதிலடி கொடுப்போம்.. எச்சரிக்கும் மதுரை அஇஅதிமுக!! - Seithipunal
Seithipunal


அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தல் குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. 

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை அரைவேக்காடு என அண்ணாமலை நேரடியாக விமர்சனம் செய்திருந்தார். 

அண்ணாமலையின் இத்தகைய பேச்சைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் இபிஎஸ் குறித்து அண்ணாமலை தலை கறைவான கருத்துக்களை கூறி வருவதாகவும் தொடர்ந்து அவ்வாறு செய்தால் உரிய பதிலடி கொடுக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai AIADMK passed resolution against annamalai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->