என் இதயமே நொறுங்கி போச்சு.. ராகுல்காந்தி வேதனையுடன் கண்டனம்!
madhya pradesh incident congress rahulgandhi
மத்திய பிரதேசத்தின் ஒரு அரசு பள்ளியில் மாணவர்கள் காகிதத்தில் மதிய உணவு பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் வெளிவந்ததை தொடர்ந்து, அதனைச் சேர்ந்த வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன் அவர் பதிவிட்ட கருத்தில், “மத்திய பிரதேசத்துக்கு நான் மேற்கொண்டுள்ள பயணத்தின் போது இந்த வீடியோவை பார்த்தேன். நாட்டின் எதிர்காலம் என்று சொல்லப்படும் குழந்தைகள் காகிதத்தில் உணவு உண்பதை காணும் போது மனம் வலிக்கிறது.
இந்தச் சிறிய குழந்தைகளுக்கு ஒரு சாதாரண உலோகத் தட்டில்கூட மதிய உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக அரசு, பள்ளிக் குழந்தைகளின் தட்டையும் திருடிவிட்டது என்பது வேதனையான உண்மை.
அவர்கள் வளர்ச்சி, கல்வி, நலன் குறித்து பேசிய எல்லா வாக்குறுதிகளும் வெறும் பொய்யாகி விட்டன. உண்மையில் அவர்களின் ஒரே நோக்கம் அதிகாரத்தில் தங்குவதுதான்; மக்களுக்காக சேவை செய்வது அல்ல,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், “இந்த மாதிரி மோசமான நிலைமையில் கூட குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பேசும் தைரியம் மத்திய பிரதேச முதல்வருக்கும், பிரதமருக்கும் இருக்கிறதே என்பது வெட்ககரமானது. உண்மையான மாற்றம் தேவைப்படுவது இதுவே என்று இந்த காட்சி சொல்லுகிறது,” எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
English Summary
madhya pradesh incident congress rahulgandhi