சர்ச்சைகளுக்கு நடுவே மக்களவையில் நிறைவேறிய இரு முக்கிய மசோதாக்கள்!
Lok Sabha BILL bhihar Election EC Issue
பீகாரில் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன. இன்று தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் காவலில் எடுக்கப்பட்டனர்.
இதற்கிடையில், மக்களவையில் விளையாட்டு துறையைச் சேர்ந்த இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மசோதா விவாதம் நடக்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கங்களுடன் போராட்டம் செய்ததால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் மீண்டும் அவைக்கு திரும்பியும் கோஷம் எழுப்பினர். சுருக்கமான விவாதத்திற்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்டவை: தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்த மசோதா.
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா விளையாட்டு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, மற்றும் வீரர் நலன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான திட்டங்களும், சர்வதேச அளவில் இந்திய வீரர்களின் பங்கையும் உயர்த்துவது இதன் முக்கிய குறிக்கோள்கள்.
இதன் கீழ், தேசிய விளையாட்டு வாரியம் (NSB) அமைக்கப்படும். இது விளையாட்டு சங்கங்கள், சம்மேளனங்கள் செயல்பாடுகளை கண்காணித்து, விதிமுறைகள் அமைக்கும். மத்திய நிதி பெற, அனைத்து சம்மேளனங்களும் இந்த வாரியத்தின் அங்கீகாரம் பெற வேண்டும். தேர்தல் முறைகேடு, நிதி தவறாகப் பயன்படுத்துதல் அல்லது ஆண்டு கணக்கு வெளியிடத் தவறினால், அங்கீகாரம் ரத்து செய்யும் அதிகாரமும் வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Lok Sabha BILL bhihar Election EC Issue