மார்க் மாமாவுக்கு கடிதம் எழுதிய நெட்டிசன்கள்.! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


சமூகவலைத்தளமான முகநூலில் அரசியல் பதிவுகளுக்கு பஞ்சமே இல்லை. அரசியல் காட்சிகளை சேர்த்த தோன்றக்கள் தங்களது கட்சிகளுக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், முகநூலில் ஒரு பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவு முகநூலின் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்-க்கு எழுதிய கடிதம் ஆகும். அதில்.,

"ஃபேஸ் புக் ஓனரான தங்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்.

ஐயா  வணக்கம்.

நாங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வசித்து வரும் சாதாரணமான அப்பாவி பொதுமக்கள். கடந்த 10 வருடங்களாக ஏதோ ஓரளவிற்கு  நிம்மதியாக இருந்து வருகின்றோம்.

எங்கள் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் வர இருக்கின்றது. இந்த தேர்தலில் திமுக என்ற கட்சி நாங்கள் வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என்று வாயால் வடைசுட்டுக்கொண்டுள்ளது.

அவர்கள் ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடியது போல படம் காட்டி வருகின்றனர்.

எதையாவது சொல்லிவிட்டு  போகட்டும்.உங்களிடம் காசு கொடுத்து நொடிக்கு ஒருதடவை 200 ரூபாய் கூலிக்கு ஆட்களை அமர்த்தி எங்களை பதிவுகளாக போட்டு கொல்லுகின்றனர்.
எங்களால் இந்த இம்சைகளை தாங்கிக்கொள்ள முடியாததால் பதிலுக்கு எதையாவது சொல்ல போய் எங்களின் பொன்னான நேரம் வீணாகின்றது.

எங்களை இந்த இழவு  எடுத்தவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள நீங்கள் எங்களுக்கு ஒரு சிறு உதவியை செய்யுமாறு  ஒட்டுமொத்த அப்பாவி தமிழ்நாட்டுமக்கள் சார்பாக கோரிக்கை வைத்து கேட்டுக்கொள்கின்றோம்.

ஒன்றுமில்லை ஐயா .

சந்தோசமாக இருப்பதை சிம்பாளிக்கா காட்ட ஒரு ஸ்மைலி, துக்கமாக இருப்பதை காட்ட  ஒரு ஸ்மைலி ,அழுவதற்கு ஒரு ஸ்மைலி என்று பல ஸ்மைலிகளை உருவாக்கி தந்துள்ளீர்கள்.

அது போன்று, நாங்கள் திமுகவினருக்கு பதில் சொல்ல வசதியாக ஒரு ஸ்பெஷல் ஸ்மைலியை உருவாக்கி தந்து எங்களின் பொன்னான நேரத்தை வீணாகாமல் காத்தருள வேண்டுகின்றோம், ஐயா.

அப்படி ஒன்று இருந்தால் நாங்கள் ஜஸ்ட் அந்த ஸ்மைலியை தட்டிவிட்டு நாங்கள் உண்டு எங்கள் வேலை உண்டு என்று இருந்துவிடுவோம்.

இதை மட்டும் நீங்கள் செய்து தந்துவிட்டால் நாங்கள்  வாழ்நாளில் என்றுமே மறக்க மாட்டோம்,ஐயா.

நன்றி !
இப்படிக்கு ,
திமுக இம்சையால் அவஸ்தைபடும் தமிழ்நாட்டு அப்பாவி மக்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

letter to Mark Zuckerberg


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal