மக்களிடம் செல் மக்களிடமிருந்து கற்றுக்கொள் என்ற அண்ணாவின் வார்த்தைகளையே கடைபிடிப்போம்! - தவெக விஜய் - Seithipunal
Seithipunal


சென்னை பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் ''MY TVK '' எனும் செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் ''விஜய்'' வெளியிட்டார்.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் 'விஜய்' வழங்கினார்.இதற்கு பிறகு பேசிய விஜய் தெரிவித்ததாவது," 1967, 1977 போல் 2026 தேர்தலும் அமைய போகிறது.

1967, 1977-ல் அதிகார பலம், அசுர பலத்தை எதிர்த்தே வெற்றி பெற்றுள்ளனர். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்று கொள் என்ற அண்ணாவின் வார்த்தைகளை கடைபிடிப்போம்.

அண்ணா சொன்னதை கடை பிடித்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம்.தொடர்ந்து மக்களுடன் மக்களாகவே இருக்க போகிறோம். வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு சென்று அனைவரையும் சந்தித்தவர்களே வெற்றி பெற்றனர்.நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lets follow Annas words of Go people and learn from people TVK Vijay


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->