செல்வபெருந்தகை மேட்டரை அப்புறமா பேசிக்கலாம்!வெள்ள நிவாரணம் பற்றி பேச எடப்பாடிக்கு அருகதையில்லை – அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்
Let talk about the Selva Perundakai matter later Edappadi is not allowed to talk about flood relief Minister Sekar Babu strongly criticizes
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருகிறார்கள், பண்டிகை நாட்களில் அந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். இதனால் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.40 கோடி மதிப்பில் நான்கு மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 70 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சந்தைச் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாநகராட்சி சார்பில் உடனடி சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சேகர்பாபு, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக எம்எல்ஏ செல்வ பெருந்தகை தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து நேரடியாகப் பதிலளிக்க மறுத்தார். “சிறிய பிரச்சினைகள் உள்ளே பேசி தீர்க்கப்படலாம்,” என அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், மழை காலத்தில் திமுக ஆட்சியை நம்பி எந்த பலனும் இல்லை, எதிர்க்கட்சிதான் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, கடும் தாக்குதலாக கூறினார்:
“எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவர் செய்த பணிகளை மக்கள் பார்த்தார்கள். அப்போது அவருடைய கால் கூட தரையில் படாது இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் மக்கள் உயிருக்கு பயந்து வீடுகளில் இருந்த நேரத்தில், களத்தில் நின்று பணியாற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வெள்ள நிவாரண பணிகள் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை,” என அவர் குற்றஞ்சாட்டினார்.
இதன் மூலம் வரவிருக்கும் பருவமழையை சமாளிக்க அரசு முழு திறனுடன் செயல்படுகிறது என்றும், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் நிறைவு பெறும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
English Summary
Let talk about the Selva Perundakai matter later Edappadi is not allowed to talk about flood relief Minister Sekar Babu strongly criticizes