குஷ்பு டிவிட்டர் பக்கத்தை முடக்கிய நபர்கள் யார்?! சென்னை சைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான நடிகை குஷ்புவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் வலைதள பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு, அவரின் அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளது. அந்த மர்ம நபர்கள் யார் என்று, டிவிட்டர் நிறுவனத்துக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். 

தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறமையால் தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றவர் நடிகை குஷ்பு. தற்போது குஷ்பு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்ப காலத்தில் திமுகவின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்ட நடிகை குஷ்பு, பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பின்னர், காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தி காரணமாக, பாஜகவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், நடிகை குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். 

இந்நிலையில், நடிகைகுஷ்புவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு உள்ளது. மேலும், அவர் பதிவிட்டு இந்த அனைத்து பதிவுகளும் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை குஷ்புவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டு, அவரின் அனைத்து நீக்கிய அந்த மர்ம நபர்கள் யார் என்று, டிவிட்டர் நிறுவனத்துக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kushboo twitter account hakeing issue today


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->