மூலகாரணம் பாஜகதான் என்று சொல்பவர்களின் மண்டைக்குள் மூளையை வைக்க வேண்டும் - நடிகை குஷ்பு கண்டனம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் ராமர் என் பிறந்தநாள் (ராமநவமி) கொண்டாடப்பட்டது.

அப்போது, பீகார் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தின் முஹம்மத் போர் என்ற கிராமத்தில் நடந்த ராமநவமி ஊர்வலத்தின் போது, அந்த பகுதியில் இருந்த ஒரு மசூதியின் மேல் காவிக் கொடி ஏற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த சம்பவம் குறித்து,  தமிழ் திரைப்பட நடிகையும், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "இதுபோன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்.

இந்த சம்பவத்திற்கு மூலகாரணம் பாஜகதான் என்று கூறுபவர்கள் மண்டைக்குள் மூளையை வைக்க வேண்டும் முதலில். இது பாஜக அல்ல. எங்கள் கட்சி இதனை ஊக்குவிப்பதும் இல்லை.

எங்களின் பிரதமர் மோடி சமத்துவம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளார்" என்று நடிகை குஷ்பு அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KUSHBOO SAY ABOUT BIHAR SOME ISSUE


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->