நரேந்திர மோடி யூடியூபில் உலக சாதனை:அரசியல் தலைவர்களில் நம்பர் 1 ...! - 3 கோடி பின்தொடர்பவர்கள் - Seithipunal
Seithipunal


இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தொழில்நுட்பம் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்டது. தகவல் பரிமாற்றம் முதல் பொழுதுபோக்கு வரை அனைத்திற்கும் சமூக வலைதளங்களே முதன்மை தளமாக மாறியுள்ளன. Instagram, Facebook, X போன்ற தளங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பயன்படுத்தி வரும் நிலையில், வீடியோக்களின் உலகை ஆட்சி செய்யும் தளமாக YouTube தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

கருத்துகளை காட்சிப் பதிவுகளாக உலகம் முழுவதும் பகிர அனுமதிக்கும் முன்னணி வீடியோ சமூக வலைதளமாக அது திகழ்கிறது.இந்த டிஜிட்டல் அரங்கில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அபார சாதனையை படைத்துள்ளார்.

யூடியூபில் 3 கோடி பின்தொடர்பவர்களை பெற்று, உலகளவில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட அரசியல் தலைவராக அவர் புதிய வரலாறு எழுதியுள்ளார்.அவரைத் தொடர்ந்து 2-வது இடத்தில் பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ 66 லட்சம் பின்தொடர்பவர்களுடன் உள்ளார்.

3-வது இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 40 லட்சம் பின்தொடர்பவர்களுடன் இடம்பெற்றுள்ளார்.2007-ஆம் ஆண்டிலேயே தனது யூடியூப் கணக்கை தொடங்கிய மோடி, இதுவரை 33,823-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றி, 800 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளார்.

இவரை பின்தொடர்பவர்களில் இந்தியர்களே பெரும்பான்மையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.இதற்கு முன், கடந்த மாதம் 26-ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்களை எட்டிய அவர், சர்வதேச அரசியல் தலைவர்களில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவராகவும் உயர்ந்திருந்தார்.

தற்போது யூடியூபிலும் இதுவரை எந்த அரசியல் தலைவரும் எட்டாத உச்சத்தை அவர் தொட்டுள்ளார்.அவரது உரைகள், வெளிநாட்டு பயணங்கள், மேலும் ‘மனதின் குரல்’ போன்ற நிகழ்ச்சிகள் நேரடியாக மக்களை சென்றடைவது, இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. டிஜிட்டல் தளங்களை திறம்பட பயன்படுத்தும் தலைவராக மோடி மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Narendra Modi breaks world record YouTube Number 1 among political leaders 3 crore followers


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->