பாஸ்போர்ட் மோசடி வெளிச்சம்: இலங்கைக்கு தப்ப முயன்ற பெண்ணை காவலர்கள் துரிதமாக செயல்பட்டு பிடித்த சம்பவம்...! - Seithipunal
Seithipunal


இலங்கைக்குச் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்திருந்த ஒரு பெண்ணின் நடத்தை காவலர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும்,சந்தேகம் ஏற்பட்டதால், சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலி பாஸ்போர்ட் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அந்த பெண் பேபி லோனா (48) என்பதும், இலங்கை நாட்டைச் சேர்ந்தவராக இருப்பதும் தெரியவந்தது. இந்தியர் முஸ்தாக் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், 2015ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியா வந்து அகதியாக தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஆனால், தனது உண்மையான குடியுரிமையை மறைத்து, ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட இந்திய ஆவணங்களை சட்டவிரோதமாக பெற்றுள்ளார்.

அவற்றை ஆதாரமாகக் கொண்டு இந்தியர் என போலியாக பாஸ்போர்ட் தயாரித்து, மீண்டும் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றதும் அதிகாரிகள் கண்டுபிடித்தன

இதையடுத்து, விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பேபி லோனாவை காவலர்கள் கைது செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Passport fraud exposed Police quickly apprehend woman trying escape Sri Lanka


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->