ஆட்சி கலைந்தும், மகிழ்ச்சியாக இருக்கும் குமாரசாமி! காரணம் இதுவா.? - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை சரிந்துள்ளது. இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ஆளும் கூட்டணி கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 

16 எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. இருந்தபோதிலும் பலனில்லை. இதற்கிடையே தங்களுக்கு தான் பெரும்பான்மை உள்ளது என்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக தரப்பு கூறியது.

கர்நாடகாவில் நடைபெற்று வந்த உச்சக்கட்ட அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. நேற்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் ஒவ்வோரு வரிசையாக அரசுக்கு ஆதரவளிப்பவர்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது.

அதேபோல அரசுக்கு எதிராக ஆதரவளிப்பவர்கள் எழுந்து நின்று வாக்களித்தனர். இறுதியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தது. அவையில் மொத்தம் 204 உறுப்பினர்கள் இருந்தனர். பெரும்பான்மைக்கு தேவையான 103 உறுப்பினர்களை பெறாத காரணத்தினால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. 

இதையடுத்து முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் வழங்கினார். இதையடுத்து முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா கடிதத்தை ஏற்கப்பட்டது என ஆளுநர் அறிவித்தார். 

இதுகுறித்து செய்தியாளருக்கு குமாரசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, நான் நிம்மதியாக இருக்கிறேன். உலகின் மிகவும் மகிழ்ச்சியாக மனிதன் இப்போது நான் தான் என்பதை உணர்கிறேன். நான் ஓய்வு பெற மாட்டேன். தொடர்ந்து போராடுவேன் என்று கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kumarasamy press meet for world happy person


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->