முக்கிய மனுவுடன் குடியரசு தலைவரை சந்தித்த., காங்கிரஸ் மூத்த தலைவர்! கரணம் என்ன?!  - Seithipunal
Seithipunal


வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். மேலும், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். மசோதாக்களை கிழுது எரிந்தும் ரகளை செய்தனர். இதனால், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் 8 பேரை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று வெளிநடப்பு செய்த பின், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வலுக்கட்டாயமாக தங்களை வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கூடாது என எதிர்க்கட்சிகள் சார்பில் குலாம் நபி ஆசாத், குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத் இந்த சந்திப்பு குறித்து தெரிவிக்கையில், வேளாண் மசோதா குறித்த எங்களின் கருத்தை குடியரசுத் தலைவரிடம் கூறினோம். தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டதாக கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KULAM NABI ASATH MEET TO INDIAN PRESIDENT


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->