காவல் நிலையத்தில் பா.ரஞ்சித்., ராஜராஜ சோழன் குறித்த வழக்கில்., தீர்ப்பை வெளியிட்ட நீதிமன்றம்!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் உள்ள திருப்பனந்தாள் காவல்துறையினர் இயக்குனர் பா.ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பேசியதற்காகவும் வழக்கு பதிவு செய்துனர்.  இது தொடர்பாக இயக்குநர் பா ரஞ்சித் முன்ஜாமீன் வழங்கக் கோரி கும்பகோணம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி  விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சித் தரப்பில் வாதாடியதாவது பல்வேறு வரலாற்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களை நான் குறிப்பிட்டேன் இது தொடர்பாக பலரும் பேசி உள்ளனர் ஆனால் என்னுடைய பேச்சை மட்டுமே சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் எந்த வித உள்நோக்கத்துடன் இந்த கருத்தை பதிவு செய்யவில்லை என்று கூறியனர்.

இதையடுத்து பேச்சுரிமையை என்றாலும் அதற்கு வரம்பில்லையா என ரஞ்சித்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மேலும் ராஜராஜசோழன் பட்டியலின மக்களின் நிலத்தை கையகப்படுத்தினர் என எந்த நோக்கத்தில் பேசினீர்கள் எனவும் சரமாறி கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது. பா .ரஞ்சித் மீதான ஆதாரங்களுடன் விரிவான மனு தாக்கல் தருமாறு நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த மாதம் முன்ஜாமீன் கேட்டு ரஞ்சித் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, இதையடுத்து கும்பகோணம் நீதிமன்றத்தில் இயக்குனர் ரஞ்சித் இன்று ஆஜரானர், நாளை முதல் 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவுயிட்டுள்ளது.

English Summary

kubambakonam court judgement to ranjth case


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal