70 ஆண்டுகால ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் நடக்குமா? கொதித்து எழுந்த அழகிரி பேட்டி!  - Seithipunal
Seithipunal


உச்ச நீதிமன்றம் சொன்னது என்பதற்காக தேர்தலை அறிவித்திருக்கிறார்கள் உள்ளபடியே தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக அறிவிக்கவில்லை. இதனால் பணவிரயம் ஏராளமான பொருட் செலவு ஏறப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மயிலாடுதுறையில் பேட்டியளித்துள்ளார். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழ்நாடு அரசாங்கம் உள்ளாட்சி தேர்தலுக்கு ஊராட்சிக்கு மட்டும் தேர்தல் அது இரண்டு கட்டமாக நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். 70 ஆண்டுகால ஜனநாயக நாட்டில் தமிழக அரசாங்கம் இது போன்று முதன்முறையாக அறிவித்திருக்கிறார்கள். 

40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு அனுபவம் உள்ள அதிகாரிகளை கொண்ட தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளுக்கு மட்டுமே இரண்டு முறை தேர்தல் அதன் பிறகு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் தவறானது. ஒரு அரசு என்பது மனிதர்களின் உழைப்பை வீணடிக்கக் கூடாது. ஒரு தேர்தலால் அதிகாரிகள் எவ்வளவு நாட்களை விரயம் செய்வார்கள் அதனால் அரசாங்கத்திற்கான பணிகள் எதுவும் சிறப்பாக நடைபெறாது. பணவிரயம் ஏராளமான பொருட் செலவு இதனால் ஏற்படும். எனவே இவர்கள் வேண்டுமென்றே தவறான பாதையில் கொண்டு செல்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

இட ஒதுக்கீட்டை கூட முறையாக செய்யவில்லை பெண்களுக்கான இட ஒதுக்கீடு தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு முறையாக இல்லை. புதிதாக மாவட்டங்களை அறிவித்திருக்கிறார்கள் ஆனால் பழைய முறையிலேயே தேர்தல் நடைபெறும் என்று சொன்னால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பஞ்சாயத்து தலைவர்கள் இருக்கமாட்டார்களா அந்த மாவட்டங்களில் பஞ்சாயத்து தலைவர்கள் இல்லாமலேயே செயல்படுமா, மேலும் இதில் இட ஒதுக்கீடு என பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. 

உச்ச நீதிமன்றம் சொன்னது என்பதற்காக தேர்தல் அறிவித்திருக்கிறார்கள் உள்ளபடியே தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக அறிவிக்கவில்லை. ஒரு நேர்மையான தேர்தலை நடத்தினால் அவர்களால் வெற்றி பெற முடியாது. மக்கள் பங்களிப்பு இல்லாத மறைமுகத் தேர்தல் என்பதே ஆள்துக்கின்ற தேர்தல். உள்ளாட்சி என்பதே மக்களுடைய பங்களிப்பு அதில் இருக்க வேண்டும். மக்கள் நேரடியாக வாக்களிக்காமல் மக்கள் பிரதிநிதிகளை வைத்து தலைவர்களை தேர்ந்தெடுப்போம் என்பது தவறு என்றார்.

செய்தியாளர் : மணி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ks azhagiri press meet in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->