டெல்லி முண்டக் வணிக வளாக தீ விபத்து.. கிருஷ்ணசாமி இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி முண்டக் வணிக வளாக தீ விபத்திற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்தது அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், (13.05.2022) வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு டெல்லி, முண்டக் மெட்ரோ விமான நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அதே இடத்தில் 27 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமுற்று சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. அந்த வளாகத்திற்குள் இன்னும் சிக்கி இருக்கக்கூடிய பலரை மீட்கக்கூடிய பணியில் தீயணைப்புத் துறை தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். 

டெல்லியின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. இதில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காயமுற்ற அனைவருக்கும் உயர் தரமான சிகிச்சை அளிக்கவும், இன்னும் கட்டிடத்திற்குள் சிக்கித் தவிப்போரை மீட்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25 லட்சமும்; காயமுற்றோருக்கு உயரிய சிகிச்சையும், ரூபாய் 10 லட்சமும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என மத்திய மற்றும் டெல்லி மாநில அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnasamy condolences for delhi fire accident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->