வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு?! அதிமுக எம்பி கேபி முனுசாமி பேட்டி!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அணை கட்டும் பணி ஒன்றுக்கான பூமிபூஜையில் கலந்து கொண்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, கூட்டணி தர்மத்தோடு  பாமகவை அனுகுவோம் என தெரிவித்துள்ளார். 

அடிக்கல் நாட்டு விழா முடித்த பிறகு கேபி முனுசாமி செய்தியாளரிடம் பேசினார். அப்பொழுது, ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒரு கொள்கை, ஒரு நிலைப்பாடு இருக்கிறது. மருத்துவர் அய்யா அவர்களை பொருத்தவரையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது அவர்களுடைய நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. 

அவர் கூட்டணி தர்மத்தோடும், கூட்டணியில் இருக்கிறோம் என்பதோடு இல்லாமல் ஆட்சியில் இருக்கிறோம் என்பதால் எங்களிடம் கேட்பதற்கான உரிமை அவரிடம் இருக்கிறது. அந்த கோரிக்கையை நாங்கள் கூட்டணி தர்மத்தோடு பரிசீலித்து, சுமுகமான உறவுடன் கூட்டணியை உறுதி செய்து தேர்தலை சந்திப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

டாக்டர் ராமதாசை மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி,இன்று மதியம் தைலாபுரம் வந்து  சந்தித்து சென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் கூட்டம் முடிந்த பிறகு, அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KP Munusamy Press meet in Krishnagiri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->