சென்னை சிறுவன்–கல்லூரி மாணவி காதல் விவகாரம்: மாற்றப்பட்ட காவல் துணை ஆணையர்!
koyambedu Love issue TN police
சென்னை வளசரவாக்கம் அருகே 18 வயதுக்கு குறைவான சிறுவன் ஒருவருடன் காதலித்ததாக ஒரு கல்லூரி மாணவிக்கு எதிராக, அந்த சிறுவனின் தாயார் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், மாணவிக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த மன அழுத்தத்திலேயே மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாணவிக்கே எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்த சிறுவன், மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.
இந்நிலைக்குப் பிறகு, சிறுவனின் தாயார், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோபமுடன் கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட துணை ஆணையர் அதிவீரபாண்டியன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
English Summary
koyambedu Love issue TN police