நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா சீனிவாசனுக்கு உணவு ஆணையத்தில் உறுப்பினர் பதவி!
kovai annapoorna srinivasan meet cm stalin
தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தில் உறுப்பினராக கோவை ஸ்ரீ அன்னபூர்ணா உணவக நிறுவனர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்த சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.
50 ஆண்டுகளுக்கு முன் கோவையில் துவங்கிய அன்னபூர்ணா உணவகம், தற்போது தமிழகம் முழுவதும் பிரஞ்சைத் தொழில்முறை வசதியுடன் பல கிளைகளைக் கொண்டுள்ளது. கடந்தாண்டு கோவையில் நடைபெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மாநாட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த சீனிவாசன், ஜிஎஸ்டி விதிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
"இனிப்புகளுக்கு குறைந்த ஜிஎஸ்டி, கார உணவுக்கு அதிகம்; பன்னில் ஜிஎஸ்டி இல்லை, ஆனால் அதில் சேர்க்கும் க்ரீமுக்கு ஜிஎஸ்டி உள்ளது" என அவர் கூறிய வீடியோ வைரலானது. பின்னர், அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது.
இந்தச் சம்பவம் பெரும் அரசியல் விவாதங்களை உருவாக்க, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக, தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே நிதியமைச்சரை சந்தித்ததாகவும், விவாதத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறோம் என்றும் அன்னபூர்ணா நிறுவனம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
kovai annapoorna srinivasan meet cm stalin