அண்ணன் பிரதமர்.. தம்பி அதிபர்.. ஒரே வலையில் சிக்கிய ஒட்டுமொத்த நாடு..! - Seithipunal
Seithipunal


இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசவும், இலங்கை பொது ஜன முன்னணி சார்பில் மஹிந்த ராஜபக்ச சகோதரர் கோத்தபய ராஜபக்சவும்  தேர்தலில் போட்டியிட்டார்கள்.

இதை தொடர்ந்து, நடந்து முடிந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார். மேலும், இந்த தேர்தலில் மொத்தம் 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றார். கோத்தபய வெற்றி அடைந்ததால், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவரது பதவியை ராஜினாமா செய்தார்.

இதை தொடர்ந்து, தனது சகோதரர் மஹிந்த ராஜபக்சவை, பிரதமராக அறிவித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்ச. இதனால் மீண்டும்  இலங்கை ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியின் கீழ் நடக்கவுள்ளது. இதற்கு முன்னதாக  மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்சவின் தந்தையான டான் ஆல்வின் ராஜபக்ச என்பவர் இலங்கையின் மிகமூத்த அரசியல்வாதியாக இருந்தவர்.

rajabaksha family, seithipunal

பின்னர், இவரது மறைவுக்கு பிறகு மஹிந்த ராஜபக்ச  மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் நேரடியாக அரசியலில் இறங்கினார்கள். ராஜபக்ச, 2004-ஆம் ஆண்டில் இலங்கையின் 13-வது பிரதமராக ஆனார். அதன் பின் அதற்க்கு அடுத்த ஆண்டே அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மஹிந்த ராஜபக்சவின் அரசில், கோத்தபய ராஜபக்சவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மஹிந்த ராஜபக்சவின் மற்றொரு சகோதரர் சமல் ராஜபக்ச தற்போதும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்ச முன்னாள் அமைச்சராக இருந்தவர். இவ்வாறாக, கிட்டத்தட்ட பல ஆண்டுகள் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இந்த குடும்பம், 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தோல்வியை கண்டது.

அதன் பிறகு,  தற்போது மீண்டும் சிங்களர்களின் பெருவாரியான ஆதரவு பெற்று  கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதன் காரணமாக, மீண்டும் இந்த குடும்பத்தின் ஆதிக்கமும், ஆட்சியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kothapaya rajabaksha and mahandra rajabaksha in srilanka


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal