கொல்கத்தா தீ விபத்தில் தமிழர்கள் பலி: முதல்வர் ஸ்டாலின், பாமக அன்புமணி இராமதாஸ் இரங்கல்!
Kolkatha fire accident CM Stalin Anbumani Condolence
கொல்கத்தா நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபுவின் குழந்தைகள் தியா(10), ரிதன்(3) மற்றும் அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோரும் மற்றும் பலரும் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்; நெஞ்சம் கலங்கினேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, இத்துயர்மிகு நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு நமது அரசு துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் உள்ள விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை மேற்கு வங்க அரசுடன் பேசி தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Kolkatha fire accident CM Stalin Anbumani Condolence