நான் சாதி பார்த்து அரசியல் செய்யவில்லை! வசமாக சிக்கிய திமுகவின் நேரு!  - Seithipunal
Seithipunal


ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின்  திமுக பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கட்சியின் முதன்மை செயலாளராக ஆக்கப்பட்ட பின்பு திருச்சி திமுகவை 3 மாவட்டமாக பிரித்து அன்பில் மகேஷ், காடுவெட்டி தியாகராஜன், வைரமணி ஆகியோரை நியமித்தனர். இந்த கூட்டத்தில் திருச்சி தெற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்களின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்ட செயலாளர் டு திமுக தலைமைக் கழக  முதன்மைச் செயலாளர் ஆக  மாறியிருக்கும் கே.என்.நேரு பேசுகையில், நான் மாவட்டப் பொறுப்புக்கு வந்து 7 வருடங்கள் ஆன பிறகுதான், கட்சியின் நிர்வாகிகள் என்னை அங்கீகரித்தார்கள். நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் எனது சொந்த ஜாதிக்காரர்களை அருகில் வைத்துக் கொள்வது கிடையாது. நான் ஜாதி அரசியல் பண்ணாத காரணத்தால் தான் அனைவரின் ஆதரவால்தான் நான் இப்போது முதன்மைச் செயலாளராக உயர்ந்திருக்கிறேன். உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன். கட்சித் தோழர்களோடு நீங்கள் இருந்தால் உங்களை யாரும்  அசைக்க முடியாது என பேசினார். மேலும், கட்சி தான் முக்கியம், அதனால் நிர்வாகிகள் தவறு செய்தாலும் அவர்களை மன்னித்து விடுங்கள் "என நேரு பேசி முடித்தார். 

இதே கூட்டத்தில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர்  வைரமணி பேசினார். அப்போது அவர் தாழ்த்தப்பட்ட மக்களில் 80% பேர் திமுகவினருக்கே ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் கட்சியில் அவர்களுக்கென தனி அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் தாழ்த்தப்பட்டோருக்கான தனி பிரிவை கட்சியில் கிளை அளவில் உருவாக்க வேண்டும், அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. 

நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டேன் என நேரு கூறிய அதே கூட்டத்தில், தாழ்த்தப்பட்டோருக்கான தனி பிரிவை கட்சியில் கிளை அளவில் உருவாக்க இன்னொருவர் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. அதேபோல நேரு அவருடைய சமுதாய கூட்டங்களில் கலந்து கொண்ட படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு நெட்டிசன்கள் விமர்சனம் வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KN Nehru Speech in trichy meeting


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal