அதிக லாபம் தருவதாக கூறி கிரிப்டோகரன்சி முதலீடுகள் பெயரில் மோசடி; 26 போலி இணையதளங்களை பட்டியலிட்டுள்ள அமலாக்கத்துறை..!
The Enforcement Directorate has listed 26 fake websites that committed fraud in the name of cryptocurrency investments
கிரிப்டோகரன்சி பெயரில் பொதுமக்களிடம் மோசடி செய்து வந்த 26 போலி இணையதளங்களை அமலாக்கத்துறை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மெகா மோசடி கும்பல் ஒன்று கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கிளை பரப்பி அதிகம் லாபம் தருவதாக முதலீட்டாளர்களை ஏமாற்றி வந்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தியுள்ளது. அதன்படி, இந்த மோசடி கும்பல் கிரிப்டோகரன்சி வர்த்தகம் என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட கோல்டுபிக்கர், ஃபின்கார்ப், மை கோல்டுரேவ் உள்ளிட்ட 26 போலி இணையதளங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டுள்ளனர்.

அதன்படி, இந்த மோசடி கும்பல் பிரபல நிபுணர்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி விளம்பரத்திற்குப் பயன்படுத்தி, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் மக்களைக் கவர்ந்துள்ளனர் என்று அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது இந்த மோசடி கும்பல் ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்களுக்குச் சிறிய தொகையை லாபமாகக் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்திய உள்ளதாகவும், பின்னர் 'ஹவாலா' மற்றும் பி2பி முறைகள் மூலம் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின் படி, இந்தக் கும்பல் சட்டவிரோதமாகச் சேர்த்த பணத்தைக் கொண்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கியுள்ளது கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
English Summary
The Enforcement Directorate has listed 26 fake websites that committed fraud in the name of cryptocurrency investments