'அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் 'கமிஷன்’ பெறுவது எழுதப்படாத விதி'; மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி சர்ச்சை பேச்சு..! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சி, ஒன்றிய அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார்.

அவ்வப்போது அவர் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பதும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகக் கோரிக்கைகளை முன்வைப்பதும் வழக்கம். அதன்படி, சமீபத்தில் கூட தனது கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட நேரிடும் என்றும் கூட்டணிக் கட்சிகளுக்குக் கெடு விதித்திருந்தார்.

அதனை தொடர்ந்து, கயாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர், அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஊழல் செய்வது குறித்தும், ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெறுவது குறித்தும் பகிரங்கமாகப் பேசியுள்ளார். இது எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 சதவீதம் கமிஷன் பெறுவது எழுதப்படாத விதியாக உள்ளது என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.

அத்துடன், தானும் இதுபோலப் பலமுறை சுமார் 40 லட்சம் ரூபாய் வரை கமிஷன் பெற்று, அதனைத் தனிப்பட்ட முறைக்குப் பயன்படுத்தாமல் கட்சியின் வளர்ச்சிக்காகக் கொடுத்துள்ளேன்’ என்று பேசியுள்ளார்.

அப்போது மேடையில் இருந்த தனது மகனும் அமைச்சருமான சந்தோஷ் குமார் சுமன் மற்றும் கட்சி நிர்வாகிகளைப் பார்த்து, 'கட்சிப் பணிகளுக்கும், தேர்தல் செலவுகளுக்கும் பணம் தேவைப்படுவதால், ஒப்பந்ததாரர்களிடம் 10 சதவீதம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, 05 சதவீதமாவது கமிஷன் பெற்றுக் கொள்ளுங்கள். அதில் கார் வாங்கலாம் அல்லது அடுத்த தேர்தலுக்குத் தயாராகலாம்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஆளும் கூட்டணி அமைச்சர் ஒருவரே ஊழலை ஆதரிக்கும் வகையில் பேசியுள்ளதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பீஹார் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Minister Jitan Ram Manjhi made a controversial statement saying that receiving commissions is an unwritten rule for politicians and elected representatives


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->