'சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக கிறிஸ்துமஸ் விழா திகழ்கிறது'; முதல்வர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


சென்னை திருவிக நகரில் உள்ள டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்வு நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:

சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக கிறிஸ்துமஸ் விழா திகழ்கிறதாகவும்,  ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்ளும் விழாவாக கிறிஸ்துமஸ் உள்ளதாகவும், சிறுபான்மையின மக்களின் நலனுக்காக திமுக அரசு பாடுபட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சமத்துவம், சகோதரத்துவத்தின் அடையாளமாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் அனைவரும் இன்றைக்கு என்ன விதமான அச்ச உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதோடு, இந்த நாட்டில் உள்ள குடிமக்களுக்கு அச்சத்தை வரவழைக்கக் கூடிய ஏதேச்சதிக்கார சக்திகளை எதிர்க்கிற திறன் திமுகவுக்கு தான் இருக்கிறது என்று பேசியுள்ளார்.

அதனால்தான் எஸ்ஐஆர் நடவடிக்கையின் போதும், இப்பொழுதும் உங்கள் அனைவரின் வாக்குரிமையை உறுதி செய்ய, உறுதியோடு களப்பணி ஆற்றி கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும், சக மனிதர்களை, சக சகோதரிகளை நினைக்கிற மக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். ஜனநாயகத்தில் இந்த வலிமைமிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து, மக்களும் ஆதரவாக இருக்கும்போது எந்த பாசிச சக்தியாலும் ஒன்று செய்ய முடியாது என்றும் பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், உங்களுக்குத் துணையாக திமுகவும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் உறுதியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதேபோல் என்றைக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும், மீண்டும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும், புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறித்து, கல்வி என்னும் பேராயுதத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். கல்விக்காக எத்தனையோ திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் மேலும், தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chief Minister stated that the Christmas festival stands as a symbol of social harmony


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->