'பிரியங்காவிடம், இந்திராவை மக்கள் பார்க்கின்றனர்; அவர் பிரதமராக்க காங்கிரஸ் எம்பிக்கள் ஆதரவு': கணவர் ராபர்ட் வாத்ரா பேட்டி..! - Seithipunal
Seithipunal


நாட்டின் வருங்கால பிரதமராக பிரியங்காவை காங்கிரஸ் எம்பிக்கள் ஆதரிக்கின்றதாக அவரது கணவர் ராபர்ட் வாத்ரா  ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கட்சிக்காக பிரியங்கா கடினமாக உழைத்து வருகிறார் என்றும், அவரது பாட்டி இந்திராவிடம் இருந்து பிரியங்கா நிறைய கற்றுக் கொண்டுள்ளதாகவும், அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. பிரியங்காவிடம், இந்திராவை மக்கள் பார்க்கின்றனர். அதேநேரத்தில் அவருக்கு என தனித்திறமைகள் உள்ளன என்று அண்ட் பேட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மக்கள் சார்ந்த பிரச்சினைகளை பிரியங்கா எழுப்புவதாகவும், காங்கிரஸ் எம்பிக்களும் பிரியங்காவை எதிர்காலத்தில் பிரதமர் ஆக ஆதரிக்கிறார்கள். அதனை மக்கள் பிரம்மிப்புடன் பார்ப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதற்காக அவர் கடினமாக உழைப்பதோடு, எங்கு எல்லாம் அவர் தேவையோ, அங்கு எல்லாம் அவர் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் இம்ரான் மசூத் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்திய இந்திராவின் பேத்தி பிரியங்கா. அவரை நாட்டின் பிரதமர் ஆக்கினால், அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பீர்கள் என்று தெரிவித்து இருந்தார். அந்த பேச்சு காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவும், பிரியங்காவிற்கு பிரதமர் பதவி குறித்து பேசியுள்ளமை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress MPs support making Priyanka the Prime Minister says her husband Robert Vadra


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->