விரிசல் அதிகரிப்பு; வங்கதேச தூதருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ள மத்திய அரசு..!
the central government has summoned the Bangladeshi ambassador again
நம் அண்டைய நாடான வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த அசாதாரண சூழலில் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவை நாடுகடத்தும் படி அந்நாடு கேட்டுக்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு, உறவில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில், வங்கதேச தூதருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் அவருக்கு சம்மன் அனுப்பப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
அந்நாட்டில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்ததில் இருந்து வங்கதேசம் - இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்ற அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது.

இந்திய சூழலில், கடந்த 15-ஆம் தேதி டாக்காவில் நடந்த கூட்டம் ஒன்றில், நேஷனல் சிட்டிசன் கட்சி தலைவர் ஹஷ்நத் அப்துல்லா, 'இந்தியாவை பிரிவினைவாதிகளை கொண்டு துண்டாக்குவோம்' பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ,இந்தியாவுக்கான வங்கதேச தூதரை வரவழைத்து கண்டனம் தெரிவித்தது.
இதனையடுத்து, வங்கதேசத்தில் திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞர் ஒருவர் முஸ்லீம் கும்பலால் அடித்து படுகொலை செய்யப்பட்டதோடு, நாடு ரோட்டில் பலர் முன்னிலையில் தீயிட்டு கொளுத்தப்பட்டார். இந்த சம்பவத்திற்கு சர்வதேச நாடிகளில் இருந்து கண்டனம் எழுந்துள்ளன.

இந்நிலையில், இதனை கண்டித்து டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால், அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். ஆனால், இந்த போராட்டம் குறித்து வங்கதேச ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டுள்ளன. இதனை வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இருப்பினும், தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்த வங்கதேச அரசு, நமது நாட்டு தூதர் பிரனாய் வர்மாவை வரவழைத்து கண்டனம் தெரிவித்தது.
அத்துடன், மீண்டும் இந்திய தூதரை வரவழைத்த வங்கதேச அரசு, டில்லியில் தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் எனக்கூறி கவலை தெரிவித்து இருந்தது. இதனையடுத்து நமது நாட்டுக்கான வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
the central government has summoned the Bangladeshi ambassador again