கேரளாவில் பாஜக ஆட்சி அமையும்.... அந்த குற்றவாளிகள் கம்பி எண்ணுவார்கள்; இது எனது உத்தரவாதம் - மோடி பேச்சு!
Keralas Foundation is Set PM Modis Sabarimala Guarantee the Gujarat Model
திருவனந்தபுரம் புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். கேரளத் தொண்டர்களின் கடின உழைப்பு வீண் போகாது என்றும், மாநிலத்தில் மாற்றத்திற்கான புதிய ஆற்றல் பெருகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குஜராத் பாணி வளர்ச்சி: 1987-ல் அகமதாபாத் மாநகராட்சி வெற்றியே குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி மலர வழிவகுத்தது என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
கேரள அஸ்திவாரம்: அதேபோல், திருவனந்தபுரம் மாநகராட்சி வெற்றி கேரளாவில் "வளர்ச்சியடைந்த கேரளா"வை உருவாக்குவதற்கான அஸ்திவாரம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சபரிமலை தங்கம்:
"சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கத் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. கேரளாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கம்பி எண்ணுவார்கள்; இது எனது உத்தரவாதம்" என்று அவர் முழங்கினார்.
இடதுசாரி (LDF) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான (UDF) முன்னணிகளின் ஊழல் ஆட்சியிலிருந்து கேரளாவை விடுவிப்பதே தங்களது முதன்மை நோக்கம் என மோடி தெரிவித்தார்.
English Summary
Keralas Foundation is Set PM Modis Sabarimala Guarantee the Gujarat Model