60 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரமுகர்.! முகநூலில் அம்பலமான விவகாரம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் : மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் பள்ளி ஆசிரியர் கே.வி.சசிகுமார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை இவர், மலப்புரம் நகராட்சியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலராகவும் இருந்தார்.

கவுன்சிலர், முன்னாள் ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த சசிகுமாரின் முன்னாள் மாணவர் ஒருவர், சசிகுமார் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை முகநூலில் பதிவிட்டார். அந்த பதிவில், "சசிகுமார் ஆசிரியராக இருந்த போது, அவரிடம் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பலரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்" தெரிவித்து இருந்தார்.

அந்த முன்னாள் மாணவரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் தீயை பரவியது. அவரிடம் படித்த பல மாணவிகள் சசிகுமாரால் தாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இப்படியாக சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள், சசிகுமாரால் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி கேரள கல்வி துறை மந்திரி சிவன்குட்டி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

முதல்கட்ட விசாரணையில் சசிகுமார் மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்தனர். அவர் கட்சியில் இருந்தும் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். 

தலைமறைவாக இருந்த சசிகுமாரை நேற்றிரவு போலீசார் கைது செய்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala cpim sasikumar arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal