தமிழை முன்னிறுத்தாமல், திராவிட சிந்தனையையே திமுகவினர் முன்னிறுத்திக்கின்றனர் - நடிகை கஸ்தூரி விமர்சனம்!
Kasthuri BJP DMK Dravidan Tamil
பா.ஜ.க. கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசியதாவது, “வந்தே மாதரம் முழக்கம் ஒலித்து இன்று 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நாட்டின் எழுச்சியை குறிக்கும் அந்த வார்த்தைகள் ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஒலிக்க வேண்டும். தெலுங்கானா மாநிலம் இதனை பெருமையாகக் கொண்டாடி மிகப்பெரிய விழா நடத்தியுள்ளது. ஆனால் வ.உ.சி., கொடியைக் காத்த குமரன் வாழ்ந்த தமிழ்நாட்டில் இந்த வரலாற்று நாளுக்காக எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.
எப்போதெல்லாம் தி.மு.க. அரசியல் சிக்கலில் சிக்குகிறதோ, அப்போது இனம், பிரிவினை போன்ற பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் கவனத்தைத் திருப்ப முயற்சிக்கிறது. தமிழ் பற்றை முன்னிறுத்தாமல், திராவிட சிந்தனையையே அவர்கள் தூக்கி காட்டுகின்றனர். ஆனால் தமிழ் பற்று மற்றும் தேசப்பற்று பற்றிப் பேசுவது நம்முடைய கடமையாகும். அதற்கான பொறுப்பு பா.ஜ.க. கலை கலாச்சார பிரிவின்மேல் இருக்கிறது,” என்றார்.
மேலும் அவர், “தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிட்ட குழுவே ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த ஆதிக்கத்திலிருந்து திரைத்துறையை விடுவிக்க வேண்டியது அவசியம். ஒரு சிறிய படத்தை எடுத்தால், அதை வெளியிடுவது கடினமான சவாலாக மாறியுள்ளது. தீபாவளி போன்ற பெரிய திருவிழாவிற்கும் ஒரு நல்ல தமிழ் படம் வரவில்லை என்பது வருத்தமானது. நல்ல கலைஞர்கள், புதிய படைப்பாளர்கள் வெளிவர வாய்ப்பு பெற வேண்டும். இதற்காக பா.ஜ.க. கலை கலாச்சார அணி முனைந்துச் செயல்பட வேண்டும்,” என்றும் கூறினார்.
English Summary
Kasthuri BJP DMK Dravidan Tamil