தனக்குத்தானே கட்டிய கல்லறையில் அடக்கம் செய்யப்ப்பட்ட ஆசிரியரின் உடல்; வாழப்பாடி அருகே சோகம்..!
The teachers body was buried in a tomb he had built for himself
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 74 வயதான பிச்சமுத்து. அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து உதவி தலைமை ஆசிரியராக உயர்வு பெற்றவர்.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்றுள்ளார்.
இறகு பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டு வீரரான இவர், மிதிவண்டி ஓட்டுவதில் விருப்பம் கொண்டவர். அத்தோடு, வித்தியாசமான சிந்தனை கொண்ட இவர், தனது சொந்த கிராமமான முத்தம்பட்டியில் கடந்த 05 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் பளிங்கு கற்களில் இவரது படத்துடன் கூடிய கல்லறையை தனக்கு தானே அமைத்துக் கொண்டுள்ளார்.
அதாவது, குறித்த கல்லறையில் முத்தம்பட்டி ஆறுமுகம் வாரியார், மனைவி மாரியம்மாளின் மகன் காசி, குருசாமி பிச்சமுத்து, உதவி தலைமை ஆசிரியர் பிறப்பு 1.7.1952, இறப்பு .... 20 .. என்றும் குறிப்பிட்டு வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார். இவரது விருப்பப்படி, இவர் தனக்குத்தானே கட்டிக் கொண்ட கல்லறையில், இன்று இவரது உடலை அடக்கம் செய்ய இவரது உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்குத்தானே கல்லறை அமைத்துக் கொண்டு உயிரிழந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
English Summary
The teachers body was buried in a tomb he had built for himself