கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து; 03 சிறுமிகள் பரிதாபமாக பலி; 06 பேர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில்  ரூலி பகுதியில் உள்ள அஹ்ரௌலி கிராமத்தில் உள்ள மாதா கோயிலின் பழைய கூரையை இடித்து விட்டு, அங்கு கோபுரம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. 

இன்று மதியம் 02 மணியளவில் பணியின்போது எதிர்பாவிதமாக கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.அப்போது கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி வைஷ்ணவி (11), சாயா (07) மற்றும் கரிஷ்மா (09) ஆகிய மூன்று சிறுமிகள் பைதாபமாக உயிரிழந்துள்ளனர். 

குறித்த விபத்தில் மேலும் 06 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோவில் கூரை இடிந்து விழுந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three girls were killed when a temple roof collapsed in Madhya Pradesh


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->