கேரள முத்தப்பனிடம் வேண்டுதலை கூறி அருள்வாக்கு கேட்ட புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம்..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பரசின்னி கடவு முத்தப்பன் கோவிலில் சிவனே முத்தப்பனாக உள்ளார். இங்கு சிவனும் சக்தியும் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 02 வேடங்களை அணிந்து, மாந்திரீக நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வதாக நம்பிக்கை உள்ளது.

கண்ணூர் புதுச்சேரியின் மாகி பிராந்தியம் அருகில் உள்ளதால், மாகி மக்களும் முத்தப்பன் கோவிலுக்கு சென்று வழிபடுவர். உள்ளூர் பாரம்பரியத்தின்படி புதுச்சேரி வாழ் மலையாள மக்கள் கடந்த 07 ஆண்டுகளாக முத்தப்பனுக்கு விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.

இந்த ஆண்டு 08-வது வது முறையாக லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பூங்காவில் முத்தப்பன் விழா நடந்தது. அதாவது, தமிழ் மக்களின் குலதெய்வ வழிபாடு போல கேரள மக்கள் முத்தப்பன் திருவிழாவை வழிபடுகின்றனர். 

இந்த விழாவின் இறுதிநாளில் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து சிவன், சக்தி பள்ளிவேட்டை ஆடி குதித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது கேரள மக்கள் முத்தப்பனிடம் தங்களது கோரிக்கைகளை காதில் கூறி அருள்வாக்கு பெற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முத்தப்பனிடம் காதில் தனது வேண்டுதலை சொல்ல அதற்கு முத்தப்பன் அருள்வாக்கு கூறினார்.

தங்கள் வேண்டுதல் நிறைவேற விழாவில் பக்தர்கள் முத்தப்பனுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு, பச்சைப்பயறு, மீன், கருவாடு போன்றவற்றோடு நீண்ட கத்தி மற்றும் தென்னங்கன்று ஆகியவற்றை கொடுத்து வழிபடுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry Speaker Embalam Selvam offered prayers and sought blessings from Keralas Muthappan


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->