பெரிய ஹீரோக்களுக்கு இல்லை… புதிய முகங்களுக்கு வாய்ப்பு: காதல் கதையுடன் கவுதம் மேனன் திரும்புகிறார்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று முகங்களுடன் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் கவுதம் வாசுதேவ் மேனன். காதல் கதைகளுக்கு கவிதைநிறம் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், கேமராவின் பின்னாலும் முன்னாலும் சமமாக ஜொலித்து வருகிறார்.

அண்மையில் திரைத்துறையில் தனது 25 ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்த அவர், புதிய படைப்புகளுக்கான உற்சாகத்துடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார்.சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்ததாவது: “என் அடுத்த படத்துக்காக ஒரு அழகான காதல் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இப்போது பெரிய ஹீரோக்கள் காதல் கதைகளில் நடிக்க விரும்பவில்லை. அதனால் இளம் தலைமுறை நடிகர்களை தேடி வருகிறேன். அதிலும் ஒரு புதிய முகத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் இருக்கிறது” என்றார்.

மேலும், “நானும் சிலம்பரசனும் சேர்ந்து ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்தை தொடங்க நினைத்தோம். ஆனால் அதில் ஆக்ஷன் அம்சங்கள் இல்லாததால் திட்டம் நின்றுவிட்டது. அதற்குப் பதிலாக ‘வெந்து தணிந்தது காடு’ உருவானது” என்றும் தெரிவித்தார்.

“இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கதை, இரண்டு இதயங்களுக்கு இடையிலான தூய்மையான உணர்வுகளின் நாடகம்.

ஜென்-இசட் காதல் வேறுபட்டது என்று பலர் சொன்னாலும், காதலின் மொழி காலம் மாறினாலும் உணர்வு மாறாது என்பதே என் நம்பிக்கை” என அவர் மனம்திறந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Not for big heroes opportunity new faces Gautham Menon returns love story


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->