சிக்கலில் கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்! உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்த எம்.பி.க்கள் குழு!
karur TVK Vijay DMK BJP
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஹேமமாலின் எம்.பி. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை குழு தொடர்புகொண்டபோதும், அவர்கள் சந்திப்பை மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, அந்த இரு அதிகாரிகளுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும் என பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் எங்கள் குழுவுடன் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது.
ஆனால் பலமுறை அழைப்பு விடுத்தும் அவர்கள் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர். இதனால் எங்கள் 8 எம்.பி.க்கள் இணைந்து உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம்” என்றார்.
இதனால், கரூர் சம்பவம் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.