உண்மை விரைவில் வெளிவரும்... ஆதவ் அர்ஜுனா பேட்டி!
karur TVK Vijay Delhi visit Aadhav Arjuna
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி நடந்த த.வெ.க தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றனர். இந்த துயரச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்திற்கான விசாரணையை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதேசமயம், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் மதியழகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீதும் சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பரப்புரை பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் காட்சிகளை ஒப்படைக்கக் கோரி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அலுவல் பணிகளும் தேசிய விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க டெல்லி சென்றதாகத் தகவல் வெளியாகியிருந்த ஆதவ் அர்ஜுனா, தற்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கூடைப்பந்து நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிக்காக எங்கள் முயற்சிகள் தொடர்கின்றன, உண்மை விரைவில் வெளிப்படும்” என தெரிவித்தார்.
English Summary
karur TVK Vijay Delhi visit Aadhav Arjuna