கரூர் கொடூரம்: முதல்வர் ஸ்டாலின், திமுக நிகழ்ச்சிகள் ரத்து!
karur tvk VIjay CM MK Stalin DMK
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் தெரிய வந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக கரூருக்கு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும் நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பல்வேறு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கரூருக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருந்த அரசுத் திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெற இருந்த தி.நகர் மேம்பால திறப்பு விழா மற்றும் நாளை ராமநாதபுரம் சென்று நடத்தவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதேபோல் திமுக சார்ந்த சில நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
English Summary
karur tvk VIjay CM MK Stalin DMK