ரெக்கார்டு படைக்கும் கரூர்! தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்! மொத்தம் 79 வேட்பாளர்கள் – தமிழக தேர்தலில் கடும் போட்டி! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு வேட்புமனு திரும்பப் பெறும் கால அவகாசம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் அதிகபட்சமாக கரூர் சட்டசபை தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பணியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 7,600 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 6,217 ஆண்கள், 1,380 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகள் அடங்குவர்.

கரூர் தொகுதியில் மட்டும் 108 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனையின் பின் 83 மனுக்கள் ஏற்கப்பட்டன. பின்னர் 4 பேர் மனுக்களை வாபஸ் பெற்றதால், இறுதியாக 79 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தொகுதியில் திமுக சார்பில் ஆசி. எம். தியாகராஜன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதியழகன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கு கூடுதலாக, அதிக அளவில் சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே 2021 தேர்தலிலும் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட கரூர் தொகுதி, இந்த முறையும் கடும் போட்டி நிலவுகின்ற ‘ஹாட்’ தொகுதியாக மாறியுள்ளது. அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால், வாக்கு சிதறல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதனால், கரூர் தொகுதி தேர்தல் முடிவுகள் மாநில அளவில் முக்கிய கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur sets record Most candidates in Tamil Nadu Total 79 candidates Tight competition in Tamil Nadu elections


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->