தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ஏற்க தயார்! கார்த்திக் சிதம்பரம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. இதனை நடுநிலையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆனால் ரூபி மனோகரன் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது தவறான செயல் என சுட்டிக்காட்டினேன். இந்த விஷயத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலையிட்டு தீர்வு கண்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றுவது வழக்கமானது. அதன்படி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர விருப்பமும், நாட்டமும், திறமையும் எனக்கு இருக்கிறது என நம்புகிறேன். 

எனவே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள நான் தயாராக உள்ளேன். தமிழக ஆளுநர் வரம்பு மீறிய செயல்படுகிறார். அவர் நாகலாந்தில் நாகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் தோல்வி அடைந்த காரணத்தால் அதற்கு தண்டனையாக தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

நாகாலாந்து பிரிவினைவாதிகள் உடன் பேச்சுவார்த்தையில் என்ன குழப்பம் விளைவித்தாரோ அதே குழப்பத்தை தற்பொழுது தமிழகத்திலும் ஏற்படுத்தி வருகிறார். மத்திய அரசு உடனடியாக அவரை திரும்ப பெற வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அதிக ஓட்டு விழும். அடுத்த தேர்தலில் இந்தி, இந்துத்துவா வாடை அறவே இருக்காது" என செய்திகளாக சந்திப்பில் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthik Chidambaram Announced Ready Tamil Nadu Congress president post


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->