உச்சகட்ட பரபரப்பில் பாஜக வட்டாரம்! ஆட்சி காப்பற்றப்படுமா?!  - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது பறிகொடுக்குமா? என்ற உச்ச கட்ட பரபரப்பில் பாஜக இருந்து வருகிறது.

கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து  ஆட்சி அமைத்தன. ஒரு வருடங்களுக்கு மேல் நீடித்த இந்த ஆட்சியானது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சில அதிருப்தி எம்எல்ஏக்கள் உருவானதால், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வழங்க மறுத்ததன் காரணமாக, போதிய பலமின்றி ஆட்சி கவிழ்ந்தது. 

தற்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கு 106 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 66 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 34 இடங்களும், பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு ஒரு இடமும் ஆக மொத்தம் 207 இடங்கள் இருக்கிறது.

இதில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆக வெளியேறியவர்கள் 17 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த 17 தொகுதிகளில் தற்போது 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க முடியுமா? என்ற உச்ச கட்ட பரபரப்பில் கர்நாடக பாஜக இருக்கிறது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் எனில் குறைந்தபட்சம் ஆறு தொகுதிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. 

இடைத்தேர்தல் நடைபெற்ற 15 தொகுதிகள் உட்பட மொத்தம் 222 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 112 தொகுதிகள் வேண்டும் என்பதால் மேலும் 15 தொகுதிகளில் 6 தொகுதிகளை வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியைத் தக்கவைக்க முடியும். ஒருவேளை தவறும் பட்சத்தில் ஆட்சியை மீண்டும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி ஆட்சி அமைத்தால் பாஜக ஆட்சியை இழக்க நேரிடும் என்ற பயமும் இருக்கிறது. 

ஏனெனில் மீண்டும் மதச்சார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே சமயம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி தேவைப்பட்டால் பாஜகவிற்கு ஆதரவு வழங்கத் தயார் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் பாஜகவிற்கு சாதகமான சூழல் இருப்பதாக தெரியவருகிறது. ஆட்சியை தக்க வைக்குமா அல்லது பறிகொடுக்குமா என்பது இன்று மதியம் தெரியவரும்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka By election Vote Counting


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal