கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்பார் அண்ணாமலை - கனிமொழி பேட்டி! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்து 92 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து தூத்துக்குடி தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான லட்சுமிபதி கனிமொழிக்கு சான்றிதழ் வழங்கினார்.

இந்த சான்றிதழை கலைஞரின் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்திய கனிமொழி, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தூத்துக்குடி தொகுதியில் எனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்த தமிழக முதலமைச்சரும், கழகத்தலைவருமான அண்ணன் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கழகத்தின் இந்த வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சித்தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு மீண்டும் வெற்றியைத் தந்த தூத்துக்குடி மக்களுக்கும் எனது நன்றி. 

தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்று தமிழக மக்கள் மீண்டுமொரு முறை நிரூபித்து விட்டனர். அண்ணாமலை அடிக்கடி என்னை, கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்பார். இரண்டு முறை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநியாக அதற்கு பதில் சொல்கிறேன். அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் தான் இப்போது பாஜக தலைமையாக இருக்கிறார்.

மேலும் அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காகத்தான் தற்போது மக்கள் அவர்களுக்கு இந்த தோல்வியை அளித்திருக்கிறார்கள். இது அவர்களுக்கான தண்டனை" என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi MP Speaks about Annamalai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->