Kanguva Review : 2000 கோடி! அவ்ளோ தான், நமக்கு விளக்கு வச்சுவிடுங்க போங்க! கொஞ்சம் இருங்க பாய்! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யாவின் *கங்குவா* திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுக்கொண்டு வருகிறது.

ஹாலிவுட் திரைப்பட அனுபவத்தை தரமாக வழங்கும் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள் என்றாலும், படத்தின் கதை, பின்னணி இசை மற்றும் வசனங்கள் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கங்குவா படத்தை இப்போதே வச்சு செய்ய தொடங்கியுள்ளார். அவரின் சமூகவலைத்தள பதிவுகளின் விவரம் பின்வருமாறு:

"சூர்யா44 எனது வழக்கமான கேங்ஸ்டர் படமில்லை.. லவ் கலந்த அதிரடி ஆக்சன்கள் நிறைந்த படம் - கார்த்திக் சுப்பராஜ்.
'கொஞ்சம் பொறுங்க பாய். 43 ஆம் நம்பர் மிஷின் நிக்கட்டும்"


"தியேட்டரை விட்டு சிதறி ஓடும் கேரள மக்கள்‌"

"நலன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் வா வாத்யார். தயாரிப்பு: ஸ்டுடியோ க்ரீன்"
இந்த பட ப்ரமோஷனில் ஞானவேல் சார்  பேச்சை கேக்க யாரெல்லாம் காத்துருக்கீங்க?


இப்படியே ஆளாளுக்கு மசமசன்னு நின்னுட்டு இருந்தா எப்படி? 
உங்களுக்கு நீங்களே மாலை மாத்தி, கேக் வெட்டி சக்ஸஸ் மீட் வககிறதுதான சரி..

தேவையான அளவுக்கு மட்டும் ப்ரமோசன்பண்ணிட்டு அமைதியா இருந்தா சுமார் படம் நல்ல வசூலாகும். நல்ல படம் பெரிய ஹிட்டாகும். உதாரணம்: லப்பர் பந்து, அமரன்.

ஓவர் பில்ட்ப் தந்த பல தமிழ்ப்படங்கள் படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு. உதாரணம்: இந்தியன் 2.

கங்குவா நிலை என்னவாகும் என்பது இனிதான் தெரியும். இனியாவது ஹாலிவுட் ரேஞ்ச் என்று சொல்வதை நிறுத்துங்கள். 

ஜூராசிக் பார்க், அவதார், டைட்டானிக், லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற படங்களின் பொருட்செலவு, தொழில்நுட்ப நேர்த்தியை தொடுவது மிகக்கடினம். அதை நாம் தொடும்போது.. அவர்கள் மேலும் பலமடங்கு முன்னேறி இருப்பார்கள்.அட்லீஸ்ட்.. அந்த வாயை வச்சிட்டாவது சும்மா இருங்க.Waiting for ..200, 500,1000,2000 cr Vadai


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanguva review blue sattai maran


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->