பேரூராட்சி தேர்தல் ரத்து.! மாநில தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் 12 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 33 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 1-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயராஜ், இரண்டாவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட சண்முக லட்சுமி, 11வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட சின்னத்துரை ஆகியோர் வேட்பு மனுக்களில் முன்மொழிந்தவர்கள் கையெழுத்து போலியாக இருப்பதாக 3 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 

திமுகவின் மூன்று வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர்களை எதிர்த்து நின்ற மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் நாகராஜ், ராஜேஸ்வரி, சிவகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு சூழ்நிலை உருவானது. 

9 வார்டுகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து நோட்டீஸ் போர்டில் அதிகாரிகள் ஒட்ட முயன்றனர். 1,2 மற்றும் 11-வார்டு குறித்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை என்பதால் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.1,2 மற்றும் 11வது வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மூன்று வேட்பாளர்களுக்கும் அதற்கான சான்றிதழை வழங்க வலியுறுத்தி திடீரென மாநகராட்சி அலுவலகம் முன்பு சுயேட்சை  வேட்பாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விதிகளை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadampur municipality election canceled


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->