ராஜேந்திர பாலாஜியை கழட்டி விடும், அதிமுக அமைச்சர்.! பொசுக்குன்னு இப்படி சொல்லிடீங்க.?!  - Seithipunal
Seithipunal


அமைச்சர் ஜெயக்குமார், "பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து, அதிமுகவின் கருத்தாக முடியாது." என்று தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு, தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாதத்தை தூண்டுகின்றது. இது நீடித்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது." என்று பகிரங்கமாக பேசியது சர்ச்சையை கிளப்பியது.

ராஜேந்திர பாலாஜி நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசியுள்ளதாகவும், எனவே அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும், கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், ராஜேந்திர பாலாஜியின் இந்த செயல் குறித்து ஆளுனரிடம் முறையிட போவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

Image result for jayakumar seithipunal

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு குறித்து கருத்து “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அது அதிமுகவின் கருத்து அல்ல! எனவே, இதுகுறித்து ஆளுனரிடம் எந்த அடிப்படையில் ஸ்டாலின் முறையிட முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar speech about rajenthira balaji


கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
Seithipunal