திருமாவளவனுக்கு திமுக உடனான கூட்டணியில் விருப்பமில்லை.!! கொளுத்தி போட்ட முக்கிய புள்ளி.!!
Jayakumar said that Thirumavalavan not interested alliance with DMK
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விருப்பமில்லாமல் திமுக கூட்டணியில் தொடர்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அவர் "தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் அரசியலில் நிறைய மாற்றங்கள் வரலாம்.
அந்த மாற்றங்களினால் திமுக கூட்டணியில் இருந்து பலர் பிரிந்து வரலாம். அந்த வகையில் திருமாவளவனுக்கு திமுக கூட்டணியில் நீடிப்பது விருப்பமில்லை. ஆதிதிராவிடர் மக்களின் உடமைக்கும், உயிருக்கும் பாதுகாப்பு பாதுகாப்பில்லை. திருமாவளவனால் இதை ஓரளவுக்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும். இதனால் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் மட்டுமல்லாது பல கட்சிகள் வெளியேறும் நிலை ஏற்படும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அலுவலகத்தில் திருமாவளவன் தலைமையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Jayakumar said that Thirumavalavan not interested alliance with DMK